TNPSC பொதுத் தமிழ் 2022..!
மனோன்மணீயம் பற்றிய குறிப்புகள்..!
◆ ‘கடிநகர்’ என்னும் சொல்லின் பொருள்?
- காவல் உடைய நகரம்
◆ மனோன்மணீயம் நூலில் எத்தனை களங்கள் உள்ளது?
- இருபது களங்கள்
◆ 'ஓகோ! நாங்கூழ்ப் புழுவே! உன்பாடு" - எனும் பாடலின் ஆசிரியர் யார்?
- மனோன்மணீயம் சுந்தரனார்
◆ பேராசிரியர் சுந்தரனார் எங்கு பிறந்தார்?
- திருவிதாங்கூர் (ஆலப்புழை)
◆ தேன்துளி எனும் சொல்லின் இலக்கணக்குறிப்பு?
- இருபெயரொட்டுப் பண்புத்தொகை
◆ பேராசிரியர் சுந்தரனார் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றிய கல்லூரி எது?
- திருவனந்தபுரம் அரசுக் கல்லூரி
◆ தமிழக அரசு பேராசிரியர் சுந்தரனாரின் பெயரில் பல்கலைக்கழகம் ஒன்றை எங்கு நிறுவியது?
- திருநெல்வேலி
◆ ‘இரகசிய வழி’ என்ற நூலை எழுதியவர் யார்?
- லிட்டன் பிரபு
◆ ‘இரகசிய வழி’ என்ற நூலை பேராசிரியர் சுந்தரனார் தமிழில் எழுதிய ஆண்டு?
- 1891
◆ ‘இரகசிய வழி’ என்ற நூலை தழுவி தமிழில் எழுதியவர் யார்?
- பேராசிரியர் சுந்தரனார்

0 Comments